/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மோதி ஆட்டோ கவிழ்ந்து 6 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
/
டூவீலர் மோதி ஆட்டோ கவிழ்ந்து 6 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
டூவீலர் மோதி ஆட்டோ கவிழ்ந்து 6 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
டூவீலர் மோதி ஆட்டோ கவிழ்ந்து 6 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
ADDED : டிச 13, 2025 05:42 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனை அருகே கூடலூரை நோக்கி சென்ற ஆட்டோ மீது டூவீலர் மோதிய விபத்தில் ஆட்டோ கவிழந்து அதில் பயணம் செய்த ஆறு பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
நராயணத்தேவன்பட்டியை சேர்ந்த செல்ல மணி 51, அரசகுமார் 40, ஜெயந்தி 40, பாண்டிசெல்வி 38, மாரியம்மாள் 42, ஈஸ்வரி 40, போதுமணி 52, ஆகியோர் அரசகுமார் என்பவரின் ஆட்டோவில் ஏறி கூடலூர் ரோட்டில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
அரசு மருத்துவமனையின் பின்பக்க பாதைக்கு அருகில் உள்ள தெருவில் இருந்து சுருளிப் பட்டியை சேர்ந்த நந்தகுமார் 39, டூவிலரில் வேகமாக வந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதினார். இதில் ஆட்டோ ரோட்டில் நின்று கொண்டிருந்த கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த காசிநாதன் 60 மீது மோதியது.
இதில் ஆட்டோ கவிழந்து அதில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த செல்ல மணி புகாரல் டூவீலர் ஒட்டி வந்த நந்தகுமார் மீது கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

