/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல் கவுரவ நிதி உதவி நிறுத்த வாய்ப்பு

ADDED : டிச 13, 2025 05:42 AM
தேனி: பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
வேளாண்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 849, போடி 232, பெரியகுளம் 844, கடமலைக்குண்டு 563, தேனி 310, கம்பம் 197, சின்னமனுார் 357, உத்தமபாளையத்தில் 288 பேர் என மொத்தம் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர்.
அவர்களிடம் அடையாள அட்டை பதிவு செய்ய வலியுறுத்தியும், அதனால் ஏற்படும் பயன்கள் பற்றியும் விளக்கி வருகிறோம். இந்த அடையாள அட்டைக்கு பதிவு செய்யாவிட்டால் 22 வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண், தோட்டக்கலை அலுவலரை அணுகலாம் என்றனர்.