/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவிக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு 8 ஆண்டு சிறை
/
மாணவிக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு 8 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு 8 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு 8 ஆண்டு சிறை
ADDED : மார் 03, 2024 06:13 AM
மூணாறு: மூணாறு அருகே அடிமாலியில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த முதியவருக்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.51 ஆயிரம் அபராதமும் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடிமாலி பஸ் ஸ்டாண்டில் செய்யதுமைதீன் 66, நடத்தி வந்த பேக்கரிக்கு 2023 பிப்.3ல் 14 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி பொருட்கள் வாங்கச் சென்றார். அவரிடம் செய்யது மைதீன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை, அடிமாலி போலீசார் கைது செய்தனர். தேவிகுளம் அதி விரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிராஜூதீன் போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் செய்யது மைதீனுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.51 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகை செலுத்தும் பட்சத்தில் அதனை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும், மேலும் ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஸ்மிசூ கே. தாஸ் ஆஜரானார்.

