/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீதம் உதவியாளர் பணியிடங்கள் காலி பணிச்சுமையால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

ADDED : செப் 25, 2024 01:42 AM
தேனி:''தமிழகத்தில் மூன்றாயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 80 சதவீதம் காலியாக இருப்பதால் தலைமை ஆசிரியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர்,'' என, தேனியில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் 80 சதவீதம் காலியாக உள்ளன.
மாணவர்களின் எமிஸ் தரவுகளை தினமும் கையாள தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் தனியாக பணிபுரிய வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துவதை விட்டு விட்டு இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் தலைமையாசிரியர்களால் வகுப்புகளை கண்காணிக்க இயலவில்லை.
மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்க காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.