/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
800 தோட்ட தொழிலாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை; இரு மாநில சுகாதார துறை இணைந்து நடத்தியது

ADDED : நவ 16, 2024 06:33 AM
கம்பம்: கேரளா,இடுக்கி, தேனி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 800 ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய் பரிசோதனை செய்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் என். சி. டி. பிரிவுகளில் அனைவரையும் சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய் கட்டுப்படுத்துதல், பரிசோதிக்கின்றனர். தேனி மாவட்டத்திலிருந்து கேரளா ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்களை பரிசோதிப்பது சவாலாக இருந்தது. இடுக்கி,தேனி கலெக்டர்களின் ஆலோசனையில் கம்பமெட்டு சமுதாய கூடத்தில் கடந்த 3 நாட்களாக சிறப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமில் இடுக்கி, தேனி மாவட்ட சுகாதாரத் துறையினர் இணைந்து பரிசோதனை செய்தனர். மதியம் 3:00 மணிக்கு முகாம் ஆரம்பமானது. ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று விட்டு திரும்பும் தொழிலாளர்களை நிறுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சர்க்கரை , பிரஷர், காசநோய், எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் 800 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதன் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு நோய்கள் இருந்தால் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்க முடியும் என்றனர்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வந்த வாகனங்களில் சுகாதாரத்துறையினர் 'ஸ்டிக்கர்' ஒட்டினர். முகாமில் மிட் லெவல் ஹெல்த் புரவைடர் எனும் வெல் நெஸ் சென்டர்களின் நர்சுகளும், காசநோய் பிரிவு அலுவலகர்களும், லேப் டெக்னீசியன்களும் பங்கேற்றனர்.