தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாற்றுத்திறனாளிகள் 89 பேர் மனு

மாற்றுத்திறனாளிகள் 89 பேர் மனு

மாற்றுத்திறனாளிகள் 89 பேர் மனு


ADDED : அக் 23, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, : கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் 89 மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள், வேலைவாய்ப்பு, கடனுதவி, மூன்று சக்கர வாகனம் உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர்.

மேலக்கூடலுார் ராமசந்திரன் மனுவில், 'குமுளியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டில் கடை ஒதுக்கீடு செய்து தர' கோரினார். ஓடைப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு சத்யாதேவி மனுவில், சில மாதங்களக்கு முன் கணவர் இறந்து விட்டார்.

என்னால் பஸ்சில் சென்று வருவது சிரமமாக உள்ளது. மூன்று சக்கர வாகனம் வழங்க உதவிட வேண்டும். என்றிருந்தது.

கூட்டத்தில் ஊன்றுகோல், கார்னர் சேர், சிறப்பு சக்கர நாற்காலி என ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முகாம் ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us