/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் 893 காலி மது பாட்டில்கள்; மது பாட்டில்களை வீசுபவர்களுக்கு எச்சரிக்கை

ADDED : ஆக 03, 2025 04:42 AM
கூடலுார் : குமுளி மலைப்பாதையின் இரு பகுதிகளிலும் கிடந்த 893 காலி மதுபாட்டில்களை அகற்றிய நிலையில், வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை வனப்பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு மாநில எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். மேலும் மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் என அதிகம் உள்ளன.
நேற்று முன்தினம் மலைப்பாதையின் இரு பகுதிகளிலும் வனத்துறையினர், ரோட்டரி சங்கத்தினர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து பாலிதீன் மற்றும் மது பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 78 கிலோ பாலிதீன் கழிவுகள் மற்றும் 893 காலி மது பாட்டில்களை அகற்றி மறுசுழற்சிக்காக நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள இம் மலைப்பாதையில் 893 காலி மது பாட்டில்கள் இருந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் மதுபாட்டில்கள் வீசுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கூடுதல் அபராதத் தொகை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் நிலை உள்ளதால் நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் வாகனம் மலைப்பாதையில் நிறுத்தக்கூடாது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.