தேனி : மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 9 பேரை போலீசார் கைது செய்து 101 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா தி.ராஜகோபாலன்பட்டி பொன்னுத்தாய் 32. மதுரை மெயின் ரோட்டில் இவரது வீட்டில் விற்பனைக்காக 5 மதுபாட்டில்களை பதுக்கினார். தங்கம்மாள்புரம் காளியம்மன் கோயில் தெரு ராசையா 57. இவர் உப்புத்துறை பிரிவு அருகே 8 மதுபாட்டில்களை பதுக்கினார். கூடலுார் பள்ளிவாசல் தெரு சகாப்தீன் 49. அங்குள்ள பழைய பஸ் நிலையம் அருகே காம்ப்ளக்ஸ் அருகில் 10 மதுபாட்டில்களை பதுக்கினார். சீலையம்பட்டி முத்தாலம்மன் கோயில் தெரு பாலசுப்பிரமணி 52. இவர் 8 மதுபாட்டில்களை பதுக்கினார். போடி குலாளர் பாளையம் வாமணன் தெரு சுரேஷ் 47. ஆறு மதுபாட்டில்களை பதுக்கினார். கூடலுார் கருநாக்கமுத்தன்பட்டி நடுத்தெரு சிவானந்தன் 29. இவரது சிக்கன் கடையில் 10 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். கீழக்கூடலுார் பட்டாளம்மன் கோயில் தெரு இந்திரஜித் 34. இவர் 34 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். உசிலம்பட்டி வலையபட்டி தங்கமாயன் 42. இவர் ஆண்டிபட்டி வைகை ஆணை ரோட்டில் உள்ள வேன் ஸ்டாண்ட் பின்புறம் 10 மதுபாட்டில்களை பதுக்கினார். உத்தமபாளையம் ஆர்.சி., வடக்குத் தெரு அந்தோணியார் 55. இவர் வாய்க்கால் பாலம் பொது கழிப்பறை அருகே 10 மதுபாட்டில்களை பதுக்கினார். ஒன்பது பேரை கைது செய்த போலீசார் 101 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

