/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் காயம்
/
ரோட்டில் நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் காயம்
ரோட்டில் நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் காயம்
ரோட்டில் நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் காயம்
ADDED : மார் 01, 2024 12:22 AM

தேவதானப்பட்டி : டீசல் இல்லாமல் ரோட்டில் நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பயணிகள் காயமடைந்தனர்.-
தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் கணேசன் 59.
இவர் டிராக்டரை பெரியகுளம் தேவதானப்பட்டி ரோட்டில்ஓட்டிச்செல்லும் போது தர்மலிங்கபுரம் - சில்வார்பட்டி வளைவு பகுதியில் டிராக்டர் டீசல் இல்லாமல் நின்றது. கணேசன் டீசல் வாங்க சென்றார். டிராக்டர் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லை.டிராக்டர் நின்றதற்கான இண்டிகேட்டர் ஒளிக்கவிடவில்லை.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ்சில் 8 பயணிகள் இருந்தனர். பஸ்சை திண்டுக்கல் பாடியூரைச் சேர்ந்த டிரைவர் வேல்முருகன் 58, ஓட்டினார். கண்டக்டர் பாலசுப்பிரமணியன் 44, பணிசெய்தார்.
இரவில் நின்றிருந்த டிராக்டர் மீது அரசு பஸ் மோதி நிலைதடுமாறி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த வத்தலக்குண்டைச் சேர்ந்த மகாலிங்கம் 47. ரங்கநாதபுரம் சுகுமாரன் 29. ஜி.உசிலம்பட்டி அமர்நாத் 46. மதுரை வாடிப்பட்டி அழகர்சாமி 50. வடுகபட்டி அருண் 34. பெரியகுளம் நல்லையன் 45. தேவதானப்பட்டி செல்வக்குமார் 18. டிரைவர், கண்டக்டர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இவர்களை தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் போலீசார்கள், பொதுமக்கள் அலைபேசி வெளிச்சத்தில் பஸ்சிலிருந்து பயணிகளை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். டிராக்டர் டிரைவர் கணேசனிடம், தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

