/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் 905 பேர் தோல்வி சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு

ADDED : மே 23, 2025 04:39 AM
தேனி:மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 905 பேர் தேர்ச்சி பெற வில்லை. இவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி துணைத்தேர்வு எழுத கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் நடக்கிறது.
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வை அரசு, உதவி பெறும், மெட்ரிக், தனியார் என 199 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6879 பேர், மாணவிகள் 7104 பேர் என மொத்தம் 13,983 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. மாவட்டத்தில் 12,806 பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 1177 மாணவர்கள் தோல்வியை தழுவினர்.இதில் கணித பாடத்தில் மட்டும் 905 பேர் தோல்வி அடைந்தனர். அவர்களை கண்டறிந்து துணைத்தேர்வு எழுத வைப்பதற்கான பணியை கல்வித்துறையினர் துவங்கி உள்ளனர்.
இதற்காக கணித ஆசிரியர்களை தேர்வு செய்து மாவட்டத்தில் 8 இடங்களில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் வருகையை பொறுத்து மேலும் சில இடங்களில் பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.