/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 92.63 சதவீதம்: சமூக அறிவியல், கணிதம், அறிவியலில் பின்னடைவு

ADDED : மே 11, 2024 05:26 AM

மாவட்டத்தில் 10 வகுப்பு பொதுத் தேர்வில் 7113 மாணவர்கள், 7112 மாணவிகள் என 14,225 பேர் எழுதினர். இதில் 6400 மாணவர்கள், 6777 மாணவிகள் என 13,177 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 92.63 சதவீதமாகும். மாணவர்கள் 713, மாணவிகள் 335 என 1048 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
கடந்தாண்டு தேனி மாநில அளவில் 90.26 சதவீத தேர்ச்சி பெற்று 26வது இடத்தை பெற்றிருந்தது. தற்போது தேர்ச்சி விகிதம் 02.37 சதவீதம் அதிகரித்து 92.63 சதவீதமமாக உயர்ந்து மாநில அளவில் 18 வது இடத்தை பெற்றுள்ளது.
68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
தேர்வு எழுதிய 200 பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 20 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 90 அரசு பள்ளிகளில் இருந்து 5325 பேர் தேர்வு எழுதியதில், 4729 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88.81 சதவீதமாகும். 596 பேர் தோல்வியை தழுவியுள்ளனர்.
மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் 14,225 பேர் தேர்வு எழுதியதில் 14,122 பேர் தேர்ச்சி பெற்று அதிகபட்சமாக 99.28 சதவீதம் பெற்றுள்ளஜர். சமூக அறிவியல், அறிவியல், கணிதப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக சமூக அறிவியலில் தேர்வு எழுதிய 14,225 பேரில், 13,625 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.78 சதவீதமாகும். இதில் 600 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். அறிவியல் பாடத்தில் 13,931 பேர் தேர்ச்சி பெற்றனர். 294 பேர் தோல்வியை தழுவினர். தேர்ச்சி விகிதம் 97.93 சதவீதமாகும். கணிதத்தில் 13,793 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 432 பேர் தோல்வியை தழுவினர். தேர்ச்சி விகிதம் 96.96 சதவீதமாகும். இதனால் பின் தங்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தெரிவித்தார்.