/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தலையில் ஈட்டி பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பலி
/
தலையில் ஈட்டி பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பலி
ADDED : ஆக 14, 2025 03:13 AM

கம்பம்:ராயப்பன்பட்டி பள்ளியில் மற்றொரு மாணவர் பயிற்சிக்காக எறிந்த ஈட்டி பாய்ந்து காயமடைந்த 9ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் கோம்பையை சேர்ந்த சந்திரன் மகன் சாய்பிரகாஷ், 13, ஒன்பதாம் வகுப்பில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்தார். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்.
ஆக 7ம் தேதி பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தின் மற்றொரு பகுதியில் கூடலுாரை சேர்ந்த சரவணன் மகன் தீதேஷ், 21, வெளியில் இருந்து கல்லுாரி மாணவர்களை அழைத்து வந்து ஈட்டி எறிதல் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, எப்படி எறிய வேண்டும் என்று தீதேஷ் ஈட்டியை எறிந்தார். அந்த நேரத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷ், பந்தை எடுப்பதற்காக வந்த போது சாய் பிரகாஷின் பின் தலையில் ஈட்டி பாய்ந்தது.
பலத்த காயமடைந்த மாணவரை தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆறு நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.