/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிளைச்சிறையில் இருந்து தப்பியவர் சிக்கினார்
/
கிளைச்சிறையில் இருந்து தப்பியவர் சிக்கினார்
ADDED : அக் 28, 2024 07:12 AM
மூணாறு : பீர்மேடு கிளைச் சிறையில் இருந்து தப்பியவர் சில மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினார்.
இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு அருகே சப்பாத்து புல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சஜன் 30. இவர் மனைவியை துன்புறுத்திய வழக்கில் கைதாகி, பீர்மேடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய சஜன் நேற்று முன்தினம் மாலை கிளைச்சிறையில் இருந்து தப்பி விட்டார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது புகைப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தேடுதல் பணியில் இறங்கினர்.
இதனிடையே ஜெயிலில் இருந்து தப்பிய சஜன் தோட்டாப்புரை பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஆட்டோவில் பழைய பம்பனாறு பகுதிக்குச் சென்றார்.
அவரை அடையாளம் கண்ட ஆட்டோ டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். பீர்மேடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சஜனை பிடித்து கிளை சிறைக்கு கொண்டு சென்றனர்.
அவர் சிறையில் இருந்து தப்பிய சில மணி நேரத்தில் சிக்கியதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

