/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறையில் சக கைதியை தாக்கியவர் மீது வழக்கு
/
சிறையில் சக கைதியை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஜன 13, 2024 04:38 AM
தேனி : உத்தமபாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் 36.
இவர் கஞ்சா வழக்கில் உத்தமபாளையம் போலீசாரால் கைது செய்து 2023 டிசம்பர் 12 முதல் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் உள்ளார். இதே சிறையில் போடியை சேர்ந்தவர் மருதுபாண்டி 30, போடி டவுன் போலீசாரால் கொலை முயற்சி வழக்கில் கைதாகி மாவட்ட சிறையில் 2023 நவம்பர் 25 முதல் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் ஜனவரி 11 காலையில் சிறையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மருதுபாண்டி, இஸ்மாயிலை திட்டி, கைகளால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். சிறை கண்காணிப்பாளர் கார்த்திக் புகாரில், கண்டமனுார் போலீஸ் எஸ்.ஐ., செல்லபாண்டியன் கைதி மருதுபாண்டி மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.