/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளுக்கு சூடு வைத்த தாய் மீது வழக்கு
/
மகளுக்கு சூடு வைத்த தாய் மீது வழக்கு
ADDED : அக் 26, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் 34. இவரது மனைவி ஜெயந்தி 29. இவரின் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டார். ஆத்திரமடைந்த தாய், தோசை கரண்டியை அடுப்பில் வைத்து சிறுமியின் தொடையில் சூடு போட்டுள்ளார்.
வலி தாங்க முடியாமல் அலறிய சிறுமியை, தந்தை ராஜேஷ்குமார் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ராஜேஷ்குமார் புகாரில் ஜெயந்தி மீது தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்கு பதிந்துள்ளார்.