ADDED : பிப் 20, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் வட்டவடை டிவிஷனில் தோட்டத் தொழிலாளி ஜெயகுமாரின் பசு புலியிடம் சிக்கி இறந்தது.
நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்ற பசு வீடு திரும்பாததால், அதனை ஜெயகுமார் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை.
இந்நிலையில் அவரது வீட்டின் அருகே தேயிலைத் தோட்டத்தினுள் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்ததை நேற்று காலை பார்த்தனர். பசுவை புலி கொன்றதாக தெரியவந்தது.
அதனை வனத்துறையினரும் உறுதி செய்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

