/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செயல் இழந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம்
/
செயல் இழந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம்
ADDED : பிப் 10, 2024 05:48 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கோத்தலூத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் துவக்கப்பட்ட சில வாரங்களில் செயல் இழந்தது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை பல மாதமாக இல்லை.
2018 --2019ம் ஆண்டு மத்திய நிதிக்குழு மானியம் ரூ.7.88 லட்சம் செலவில் கோத்தலூத்து கிராமத்தில் சுத்திகரிப்பு குடிநீர் பெற குடிநீர் மையம் துவக்கப்பட்டது. பொதுமக்கள் ரூ.5 செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பிடித்துச் சென்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பு மையம் சில நாட்களில் பழுதடைந்தது. இதனை சீரமைக்கும் நடவடிக்கை பல மாதமாக இல்லை. கோத்தலூத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.