ADDED : நவ 16, 2026 10:26 PM
அ நிறம் | அளவு
மூணாறு: சுப்பிரமணியசுவாமி கோயிலில் அரோகரா கோஷத்துடன் முருகனின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.
இந்த கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்பட ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகன் மணக்கோலத்தில் எளுந்தருளினார். பக்தர்களின் சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணசர்மா வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் சார்த்தினார். நேற்று இரவு திருமண விருந்து நடந்தது. ஏற்பாடுகளை இந்து தேவஸ்தான குழு முக்கியஸ்தர்கள் செய்தனர்.
