ADDED : அக் 04, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1008 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கொட்டக்குடி பகுதியில் வசிக்கும் 32 பேருக்கு செப்., மாதம் பட்டா வழங்கப்பட்டதுடன், அவர்களில் 28 பேருக்கு கனவு இல்ல திட்டத்திற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் மூன்று மாதத்தில் கட்டி முடிக்கப்பட உள்ளது. வீடுகள் கட்டுமான பணி துவக்கவிழாவில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்றார்.