ADDED : நவ 07, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி- பெரியகுளம் ரோட்டில் ரத்தினம் நகர் கோயில் அருகே பேக்கரி செயல்படுகிறது.
இங்கு போதிய சுகாதார முறைகளை பின்பற்றாமல் உணவு தயாரிக்கப்படுவதாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். தேனி உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் ஆய்வு செய்தார்.
கடையில் காலவதியான உணவுப்பொருட்கள் விற்பனை, சுகாதார முறைகளை பின்பற்றாததற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.