/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துவக்கப் பள்ளியில் புகுந்த நல்ல பாம்பு
/
துவக்கப் பள்ளியில் புகுந்த நல்ல பாம்பு
ADDED : ஜூலை 25, 2025 03:12 AM

-- தேவதானப்பட்டி: சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 50 க்கும் அதிகமான மாணவர்கள், மாணவிகள் படித்து வருகின்றனர். காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பென்சிற்கு அடியில் 'புஷ் புஷ்' என சத்தம் வருவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். மாணவ, மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 5 அடி நீள நல்லபாம்பை இடுக்கி கம்பியில் லாவகமாக பிடித்து சாக்கில் கட்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின் சோத்துப்பாறை வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.
அசம்பாவிதம் தடுக்கப்பட்டது: சில்வார்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே பள்ளியை சுற்றி புதர் மண்டியுள்ளது. இதனால் பாம்பு பள்ளிக்குள் புகுந்துள்ளது. நல்ல வேளையாக முன் கூட்டியே மாணவர்கள் பார்த்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
ஊராட்சி நிர்வாகம் பள்ளி சுற்றுப்பகுதியில் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.