/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக்கிற்கு லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து அரசு பஸ் சேதம்
/
டாஸ்மாக்கிற்கு லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து அரசு பஸ் சேதம்
டாஸ்மாக்கிற்கு லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து அரசு பஸ் சேதம்
டாஸ்மாக்கிற்கு லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து அரசு பஸ் சேதம்
ADDED : ஜூலை 08, 2025 01:54 AM

தேனி: டாஸ்மாக் குடோனுக்கு லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்ததில் அரசு பஸ் ஜன்னல், கதவுகள் சேதமடைந்தது.
கம்பம் அரசு பஸ் டெப்போவிற்கு சொந்தமான பஸ் குமுளியில் இருந்து தேனி வழியாக திருநெல்வேலி சென்றது. நேற்று காலை 11:00 மணி அளவில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே சென்றது.
பஸ்சிற்கு முன் டாஸ்மாக் குடோனுக்கு லோடு ஏற்றி சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கருவேல்நாயக்கன் பட்டியில் உள்ள குடோனுக்கு திரும்பியது.
அப்போது லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. அந்த அழுத்தத்தில் ரோட்டில் இருந்து கற்கள் சிதறின.
அந்த கற்கள் லாரிக்கு பின் சென்ற பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல், கதவில் பொருத்தியிருந்த கண்ணாடிகளில் விழுந்தது.
இதனால் இந்த கண்ணாடிகள் நொறுங்கின. பஸ் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அவ்வழியாக நாகர்கோவில் சென்ற பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டனர்.