/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி பேரூராட்சி தரம் உயர்த்த கருத்து கேட்புக்கூட்டம் இன்று நடக்கிறது

ADDED : நவ 11, 2024 04:56 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து கவுன்சிலர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடக்கிறது.
ஆண்டிபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் 18 வார்டுகள் உள்ளன.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். ஆண்டிபட்டி தேர்வு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த ஏற்கனவே அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு அருகில் உள்ள கிராம ஊராட்சிகளின் சில பகுதிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தின் கருத்துருவை தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்கள் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு பேரூராட்சி கவுன்சில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.