/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் யானை கூட்டம் அருவியில் குளிக்க அனுமதி இல்லை
/
சுருளி அருவியில் யானை கூட்டம் அருவியில் குளிக்க அனுமதி இல்லை
சுருளி அருவியில் யானை கூட்டம் அருவியில் குளிக்க அனுமதி இல்லை
சுருளி அருவியில் யானை கூட்டம் அருவியில் குளிக்க அனுமதி இல்லை
ADDED : அக் 14, 2025 04:22 AM

கம்பம்: சுருளி அருவிக்கு யானைகள் கூட்டம் திடீர் விசிட் அடித்து பின்னர் சென்றது. இதனால் ஒரு நாள் மட்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை.
சுருளி அருவியில் குளிப்பதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை 8: 30 மணிக்கு அருவிக்கு மிக அருகில் யானைகள் கூட்டம் ஒன்று நின்றிருப்பதை பார்த்த வளத்துறையினர், சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கவில்லை. உடனடியாக அருவி பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர் கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நேற்று காலை யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு நாள் முகாமிட்டு யானைகள் கூட்டம் போக்கு காட்டி சென்றது.