ADDED : அக் 14, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் பள்ளிக்கோட்டைபட்டி அருகேயுள்ள பாலத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் வெள்ளைச்சாமி 44, என்பவரின் உடல் மீட்கப்பட்டது.
இவர் சின்னமனூர் எரசக்கநாயக்கனுார் ரோட்டில் ஒத்த வீட்டில் வசித்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி 34, இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெள்ளைச்சாமி ஆட்டோ டிரைவராக உள்ளார். மது பழக்கம் உள்ளது.
அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வராமல் இருப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் பள்ளிக்கோட்டைபட்டி டாஸ்மாக் கடை அருகில் பாலத்திற்கு கீழ் இறந்து கிடந்துள்ளார்.
மனைவி பாண்டீஸ்வரி புகாரில் சின்னமனூர் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.