/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகைக்காக நண்பனை வெட்டி கொன்ற வாலிபருக்கு 'காப்பு'
/
நகைக்காக நண்பனை வெட்டி கொன்ற வாலிபருக்கு 'காப்பு'
ADDED : அக் 13, 2025 11:34 PM

போடி: தேனி மாவட்டம், போடி அருகே உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் நவீன்குமார், 25. அதே தெருவில் வசிக்கும் குணசேகரன், 27. இருவரும் நண்பர்கள். அக்., 6ல் வீட்டை விட்டு சென்ற நவீன்குமார், வீடு திரும்பவில்லை. நவீன்குமார் தாய் ஜெயலட்சுமி, வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், பெற்றோர், உறவினர்கள் நேற்று, உப்புக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை கலைத்தனர்.
சந்தேகத்தில் போலீசார், குணசேகரனை பிடித்து விசாரித்தனர். இதில், நவீன் குமாரை வெட்டி கொன்று, அவர் அணிந்திருந்த, இரண்டு சவரன் நகையை பறித்ததாகவும், உடலை முல்லை ஆற்றில் வீசியதும் தெரிந்தது. நேற்று கருப்பசாமி கோவில் அருகே நவீன்குமாரின் உடலை போலீசார் மீட்டனர்.