ADDED : அக் 13, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் தனியார் மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைப்பு நுாற்றாண்டு விழா, விஜயதசமி விழா நடந்தது.
பாலசங்கா குழும நிர்வாகி கதிரேசன் தலைமை வகித்தார். தக்ஷின் சேஷத்ர ப்ரச்சார் ப்ரமுக் நிர்வாகி ஸ்ரீராம், வர்த்தக பிரமுகர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாத்தல், சட்டங்களை கடைபிடித்தல், குடும்ப உறவுகள், சமுதாய நல்லிணக்கம், சுதேசி பொருட்களை வாங்குதல் ஆகிய தலைப்புகளில் பேசினர். அமைப்பு மாவட்ட செயலாளர் முத்துராஜ், நகரத் தலைவர் மோகன், நகரச் செயலாளர் ரமேஷ், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.