ADDED : பிப் 20, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் கதிரடிக்கும் களம் வசதி குறைவால் அறுவடை செய்யப்பட்ட துவரை காய்களை விவசாயிகள் ரோட்டில் காய வைத்துள்ளனர்.
இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சிறுதானியம், பயறு வகைகள் சாகுபடி உள்ளது. தற்போது இப்பகுதியில்அறுவடைக்கான சீசன் சில வாரங்களாக தொடர்கிறது. ஒரே நேரத்தில் விவசாயிகள் பலரும் பயறு வகைகளை அறுவடை செய்துள்ளனர்.
விளைந்த காய்களை உலர்த்தி அதிலிருந்து பயறு பிரித்தெடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் பலஏக்கரில் அறுவடைசெய்துள்ளதால் உலர வைப்பதற்கு போதுமான கதிரடிக்கும் களம் இல்லை. இதனால் தெப்பம்பட்டி - கண்டமனூர் ரோட்டை பல இடங்களில் கதிரடிக்கும் களமாக பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில் கதிரடிக்கும் களம் கூடுலாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

