/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை தாக்கிய கணவர்; 9 பேர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர்; 9 பேர் மீது வழக்கு
ADDED : செப் 20, 2024 06:29 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி மாளிகைப்பாறை கருப்புசாமி கோயில் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மனைவி தங்கம் 45. இவர்களுக்கு ரத்தீஸ்கண்ணன் 15,மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
பால்பாண்டிக்கு சொந்தமான 25 சென்ட் இடத்தை தங்கம், ரத்தீஸ்கண்ணனுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை கேட்டு பால்பாண்டி தூண்டுதலில் உறவினர்கள் வீருச்சாமி, விஜயன், பாலன், தமிழ்ச்செல்வி, அன்னப்பெருமாயி, முத்துச்செல்வி, லட்சுமணன், சந்தனம் உட்பட 9 பேர், தங்கம் வீட்டினை சேதப்படுத்தி, அவரையும் தாக்கினர். தடுக்க வந்த தங்கத்தின் அக்கா மகன் முத்துப்பாண்டி, அம்மா பேச்சியம்மாளுக்கு அடி விழுந்தது. தேவதானப்பட்டி போலீசார் பால்பாண்டி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-