/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 27, 2025 07:01 AM

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் நேற்று மாலை ராகு, கேது பகவான்கள் பெயர்ச்சி நடந்தது.பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ராகு, கேது பகவான்கள் தனித்தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர்.
காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமான இங்கு ராகு, சிம்ஹை தேவியுடனும், கேது, சித்ரலேகா தேவியுடனும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும். 2023 அக். 8 ல் மதியம் 3:40 க்கு ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆனார்கள்.
16 மாத இடைவெளியில் நேற்று மாலை 4:20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆனார்கள். ராகு பகவான்கள் தேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பெயர்ச்சியை முன்னிட்டு ஹோமங்களை தொடர்ந்து மாலை 4:20 மணிக்கு பெயர்ச்சி நடந்தது.பின் ராகு , கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 4:30 மணிக்கு ராகு பகவானுக்கும் சிம்ஹை தேவிக்கும், கேது பகவானுக்கும் சித்ரலேகா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசியினரும் பரிகார பூஜைசெய்து ராகு, கேது பகவான் அருள் வேண்டினர். - நிகழ்ச்சி உபயதாரராக கம்பம் ஜெயப்பாண்டியன், கலைவாணி குடும்பத்தினர் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயராமன் செய்தார்.