/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிறது புதிய வாகனம்
/
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிறது புதிய வாகனம்
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிறது புதிய வாகனம்
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிறது புதிய வாகனம்
ADDED : ஜன 15, 2024 11:38 PM
தேனி : லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக மின்னனு ஓட்டுப் பெட்டிகள் சரிபார்ப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளன.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மாதிரி ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
'ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது.
அந்த வாகனத்தில் மாதிரி ஒட்டுப்பதிவு இயந்திரத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வாகனம் செல்ல உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படும் வரை இந்த வாகனம் மூலம் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.', என்றனர்.