UPDATED : அக் 27, 2026 12:59 AM
ADDED : அக் 27, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே கரட்டுப்பட்டி ஜக்கம்மாள் தெரு ரத்தினபாண்டி 34. இவரது தந்தை பொன்னுச்சாமியுடன் போடி பரமசிவன் கோவில் கரடு பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த போடி தங்க முத்தம்மன் கோயில் தெரு விக்னேஷ் 21. குப்பிநாயக்கன்பட்டி ராஜேஷ், பாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரத்தின பாண்டியிடம் இருந்த அலைபேசி, கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்க பறித்து சென்றனர்.
ரத்தினபாண்டி புகாரில் போடி டவுன் போலீசார் விக்னேஷ்யை கைது செய்தனர் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
