UPDATED : அக் 27, 2026 12:59 AM
ADDED : அக் 27, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு பார்வையற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம்.
40 வயதிற்குட்பட்ட,8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, நாற்காலி வயர் பின்னுதலில் ஒரு வருட அனுபவம் அவசியம். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு சான்றிதழ், இஸ்லாமியர் என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார், ரேஷன் அட்டை, 2 புகைப்படத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நவ.,13 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
