/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்வியுடன் இயற்கை விவசாயத்தை வளர்க்கும்் பள்ளி
/
கல்வியுடன் இயற்கை விவசாயத்தை வளர்க்கும்் பள்ளி
ADDED : ஜன 22, 2024 05:45 AM
பெரியகுளம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உட்கடை விவசாயிகளின் பிள்ளைகளுக்காக பெரியகுளம் ஒன்றியம் வரதராஜ் நகர்
ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நுழைவு பகுதி முதல் அனைத்து பகுதிகளிலும் அடர்த்தியான நிழல் தரும் மரங்களும், புல்வெளிகளும் காட்சி அளிக்கின்றன. ஒவ்வொரு மாணவர்களும், அடுத்தடுத்த பருவங்களில் வாழ்நாளில் குறைந்தது 200 மரக்கன்றுகளை நட்டு மரமாகும் வரை அதை பாதுகாத்து கண்காணிப்பது அவசியம் என சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வலியுறுத்தப்படுகிறது. இப்பள்ளியில் இயங்கி வரும் தேசிய பசுமை படை மூலம் தினமும் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து விவசாய நிலத்தில் தினந்தோறும் மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர்.
பசுமைத் தோட்டம்
பள்ளி வளாகத்தில் மூன்று ஏக்கரில் நூற்றுக்கணக்கான மருத மரங்கள், தேக்கு, வேம்பு, ஆலம், தென்னை, கொய்யா, பூவரசம், புங்கை, நாவல் என, பல நூற்றுக்கணக்கான மரங்கள் வளர்ந்து பசுமை வனமாக காட்சியளிக்கிறது. மேலும் நூற்றுக்கணக்கான மூலிகைச் செடிகளில் இருந்து வெளிவரும் காற்று சுவாசத்தை மேம்படுத்தி, உடல் இயக்கத்தை சீராக்குகிறது. 2 கி.மீ., தொலைவில் வைகை அணை உள்ளதால் பள்ளி காற்றோட்டமாக இருக்கிறது.