/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் தொகுப்பு வழங்க 3.76 லட்சம் ரேஷன் கார்டுகள் தேர்வு ஜன.10 முதல் வழங்க ஏற்பாடு
/
பொங்கல் தொகுப்பு வழங்க 3.76 லட்சம் ரேஷன் கார்டுகள் தேர்வு ஜன.10 முதல் வழங்க ஏற்பாடு
பொங்கல் தொகுப்பு வழங்க 3.76 லட்சம் ரேஷன் கார்டுகள் தேர்வு ஜன.10 முதல் வழங்க ஏற்பாடு
பொங்கல் தொகுப்பு வழங்க 3.76 லட்சம் ரேஷன் கார்டுகள் தேர்வு ஜன.10 முதல் வழங்க ஏற்பாடு
ADDED : ஜன 09, 2024 06:11 AM

தேனி : மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பாக பணம் ரூ.ஆயிரம் பெறுவதற்கு தகுதியான 3.76 லட்சம் ரேஷன் கார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்தொகுப்பினை ஜன., 10 முதல் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா ஒருகிலோ பச்சரிசி, சர்க்கரை,முழு கரும்பு, ரூ. ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதிலும் அரசு ஊழியர்கள், வருமான வரிசெலுத்துவோர், பொதுத்துறை ஊழியர்கள், சர்க்கரை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தொகுப்பு, பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 77 கூட்டுறவு சங்கங்களின் கீழ் 403 முழுநேர, 123 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இங்கு 4,30,765 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில் 3,76,130 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு, பணம் வழங்கப்பட உள்ளது. கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் ஆரோக்கிய சுகுமார், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் மூலம் கரும்பு கொள்முதல் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட உள்ளது. தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் ஜன.,8 முதல் வீடு, வீடாக சென்று பணியாளர்கள் வழங்கும் பணி நடந்தது. இன்று இப் பணி முடிவடைகிறது.
மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் செங்கரும்பு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு செங்கரும்பு அனுப்பும் பணி நேற்று துவங்கியது. பொங்கல் தொகுப்பு ஜன., 10 முதல் வழங்கப்பட உள்ளது.