/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சியில் தெருவில் உருவான கழிவு நீர் குளம்
/
நகராட்சியில் தெருவில் உருவான கழிவு நீர் குளம்
ADDED : ஆக 29, 2025 03:37 AM

தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சி ஓடைத்தெருவில் கழிவு நீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடி, தொற்று நோய்களால் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
இந்நகராட்சியின் 18 வது வார்டில் பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, ஓடைத்தெரு, காமராஜர் தெரு, கருணாநிதி தெரு, பழனிவேல்ராஜன் குறுக்குத் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இதில் பூமாரியம்மன் கோயில் எதிரே உள்ள குறுக்குத் தெருவில் நுழைவுப் பகுதியில் சாக்கடை கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது.
இதன் மீது நடந்துதான் அனைவரும் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள், வார்டு கவுன்சிலர் அவ்வழியாக சென்றாலும் அதனை கண்டும் காணாதது் போல் செல்கின்றனர்.
தேங்கும் கழிவு நீரில் கொசு அதிகளவில் உற்பத்தியாகி பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள், முதியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

