/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாப்பிடும் போது மயங்கி விழுந்த கடைக்காரர் பலி
/
சாப்பிடும் போது மயங்கி விழுந்த கடைக்காரர் பலி
ADDED : ஜன 22, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வாழையாத்துப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பிரபு 36.
இவர் அப்பகுதியில் சிக்கன் வறுவல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சவுமியா 24. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரபு வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது புரையேறி விக்கல் எடுத்து, மயங்கி விழுந்தார். இவரது மனைவி, பெற்றோர் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.