/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலரில் சீறிய பாம்பு அலறியடித்து மக்கள் ஒட்டம்
/
டூவீலரில் சீறிய பாம்பு அலறியடித்து மக்கள் ஒட்டம்
ADDED : மே 19, 2025 05:46 AM

கம்பம் : கம்பம் மெயின் ரோட்டில் ஹோட்டல் தொழிலாளியின் டூவீலரில் பாம்பு ஏறி, 'ஷீட்'டின் உட்புறம் சென்றதால் தீயணைப்புத் துறையினர் போராடி பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாம்பை பார்த்த மக்கள் அலறி அடித்து ஒடிய சம்பவம் நடந்தது.
இப்பகுதியில் உள்ள கம்பராயப் பெருமாள் கோயில் அருகில் பிரபல சைவ ஹோட்டல் உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளி முருகானந்தம், நேற்று மாலை தனது டூவீலரில் வேலைக்கு வந்தார். ஹோட்டல் முன் டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அப்போது டூவீலரின் பின் பக்கம் உள்ள விளக்கு வழியாக, பாம்பு ஒன்று ஏறுவதை பார்த்து பொது மக்கள் கூச்சலிட்டனர். பாம்பை ஸ்கூட்டருக்குள் இருந்து வெளியேற்ற, பல வழிகளில் முயன்றும் முடியவில்லை. பின்னர் தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து, ஸ்கூட்டரின் 'ஷீட்'டை கழட்டி உள்ளே உடலை சுருட்டி படுத்திருந்த பாம்பைப் பிடித்தனர். தீயணைப்புத்துறையினர் கூறுகையில், 'மீட்கப்பட்ட பாம்பு தண்ணீர் சாரை வகையை சார்ந்தது. வனப்பகுதியில் விட்டுவிட்டோம். மழை காலம் தொடங்க இருப்பதால் பொது மக்கள் டூவீலர்களை இயக்கும் போது எச்சரிக்கையாக பரிசோதனை செய்துவிட்டு, இயக்க வேண்டும். குறிப்பாக ஸ்கூட்டர்களை இயக்கும் பணிக்கு செல்லும் பெண்கள் கவனம் அவசியம். அதேபோல் வீடுகளில் பள்ளி செல்லும் சிறார்கள், பெரியவர்கள் ஷூ, காலணிகளை அணியும் போது மிகவும் கவனமாக, பரிசோதனை செய்த பின்பே அணிவது அவசியம்., என்றனர்.