/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குற்ற வழக்குகளில் தலைமறைவு; கண்டுபிடிக்க இயலாமல் திணறல்
/
குற்ற வழக்குகளில் தலைமறைவு; கண்டுபிடிக்க இயலாமல் திணறல்
குற்ற வழக்குகளில் தலைமறைவு; கண்டுபிடிக்க இயலாமல் திணறல்
குற்ற வழக்குகளில் தலைமறைவு; கண்டுபிடிக்க இயலாமல் திணறல்
ADDED : ஜன 18, 2025 07:05 AM

மூணாறு : மூணாறில் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதால் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கல்லார் எஸ்டேட் புதுக்காடு டிவிஷனில் ஜெகநாதன் தனது மனைவி கீதா 28,வை 2011 மார்ச் 19ல் கொலை செய்தார்.
கொலைக்குப் பின் தப்பிய ஜெகநாதனை போலீசாரால் கைது செய்ய இயலவில்லை.
மாயம்: கடலார் எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் தோட்டத் தொழிலாளி தனசேகர் 38, கடந்த 2021 ஏப்ரல் 20ல் பணியின் இடையே மாயமானார். தேயிலைச் செடிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக் கொல்லி மருந்துகள் மாயமானது தொடர்பாக தனசேகரிடம் போலீசார் விசாரணை நடத்த இருந்த நிலையில் மாயமானார்.
தலைமறைவு : ஜெகநாதன், தனசேகர் தமிழகத்தில் தலைமறைவாக உள்ளதாக மூணாறு போலீசாருக்கு தெரியவந்தபோதும் வேறு தகவல்கள் இல்லாததால் அவர்களை நெருங்க இயலவில்லை.
அதனால் கீதா கொலை செய்து 14 ஆண்டுகள் ஆகியும் ஜெகநாதனை கைது செய்ய இயலாமலும், மாயமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் தனசேகரை கண்டு பிடிக்க இயலாமலும் போலீசார் திணறி வருகின்றனர்.