/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுாற்றாண்டு பள்ளி மூடுவதை தவிர்க்க தனது குழந்தைகளை சேர்த்த ஆசிரியர்
/
நுாற்றாண்டு பள்ளி மூடுவதை தவிர்க்க தனது குழந்தைகளை சேர்த்த ஆசிரியர்
நுாற்றாண்டு பள்ளி மூடுவதை தவிர்க்க தனது குழந்தைகளை சேர்த்த ஆசிரியர்
நுாற்றாண்டு பள்ளி மூடுவதை தவிர்க்க தனது குழந்தைகளை சேர்த்த ஆசிரியர்
ADDED : செப் 19, 2024 02:12 AM

கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் அருகே நுாற்றாண்டு விழா காணும் அரசு கள்ளர் பள்ளி குழந்தைகள் இன்றி மூடுவதை தவிர்க்க ஆசிரியர் தனது குழந்தை, உறவினர் குழந்தைகளை சேர்த்தார்.
கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள கள்ளர் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். அணைப்பட்டி அரசு கள்ளர் பள்ளியில் கடந்த ஆண்டு இரு மாணவிகள் மட்டும் படித்தனர்.
இதில் ஒரு மாணவி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றார். இதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவியின் தங்கை, அக்காவுடன் சேர்ந்து வேறு பள்ளிக்கு மாறி சென்றார்.
இந்நிலையில் சுருளிப்பட்டி கள்ளர் பள்ளியில் இருந்து அணைப்பட்டி பள்ளிக்கு மாறுதலாகி ஆசிரியர் சுந்தர் வந்தார். அப்போது பள்ளியில் மாணவர்களே இல்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் வங்கி கணத்தில் தனது சொந்த பணத்தில் ரூ.300 வீதம் செலுத்தப்படும். வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வர இலவச ஆட்டோ வசதி, பள்ளியில் மினரல் வாட்டர், எளிதாக குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச உத்தரவாதம் என கூறி துண்டு பிரசுரம் அச்சடித்து வீடு வீடாக சென்று கொடுத்தார். ஆட்டோ பிரசாரமும் செய்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி தனது குழந்தை புகழ்மதி, தங்கையின் குழந்தைகள் கீர்த்தி சரண், கவின் பாரதி, தம்பியின் குழந்தை சர்வின் என நான்கு குழந்தைகளை நேற்று அணைப்பட்டி பள்ளியில் சேர்த்தார். இனிமேலாவது இப் பள்ளி மீது நம்பிக்கை ஏற்பட்டு கிராமத்தினர் தங்கள் குழந்தைகளை சேர்க்க வருவார்கள் என நம்பிக்கையுடன் உள்ளார்.