/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூலிகை காய்கறி, பழங்கள் விளையும் மாடித்தோட்டம் மனதை ரிலாக்ஸ் ஆக்கும் பராமரிப்பு பணி
/
மூலிகை காய்கறி, பழங்கள் விளையும் மாடித்தோட்டம் மனதை ரிலாக்ஸ் ஆக்கும் பராமரிப்பு பணி
மூலிகை காய்கறி, பழங்கள் விளையும் மாடித்தோட்டம் மனதை ரிலாக்ஸ் ஆக்கும் பராமரிப்பு பணி
மூலிகை காய்கறி, பழங்கள் விளையும் மாடித்தோட்டம் மனதை ரிலாக்ஸ் ஆக்கும் பராமரிப்பு பணி
ADDED : ஜூலை 07, 2025 02:20 AM

பெரியகுளம், தென்கரை மாரியம்மன் சன்னதி வடக்கு 2 வது தெருவில். வீட்டின் இரு மாடிகளில் தலா ஒரு சென்ட் இடத்தில்  இருபது ஆண்டுகளாக ராதாகிருஷ்ணன் இவரது மனைவி பஞ்சவர்ணம் இணைந்து மாடித்தோட்டம் அமைத்து அசத்தி வருகின்றனர். மாடித்தோட்டத்தில் சிட்டு குருவிகள் ரீங்காரம், கண்களுக்கு பசுமை விருந்தளிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  தம்பதிகள் எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் அரைமணிநேரம் மாடித்தோட்டத்தில் நேரம் செலவிட்டால் மனம் ரிலாக்ஸ் ஆகும் மந்திர தோட்டமாகும் என்கின்றனர்.
செடிகள், மரங்கள், பூ வகைகள்
ராதாகிருஷ்ணன் (தங்க நகை தயாரிப்பாளர்) கூறுகையில்: எங்கள் மாடிதோட்டத்தில் மா , எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ஸ்டார் பழம், வாட்டர் ஆப்பிள், அத்திப்பழம், வாழை, மருதாணி, நாவல், முருங்கை ஆகிய மரங்கள் வைத்துள்ளோம். மலர்  வகைகளில் ரோஜா பூ, 1,2,3 அடுக்கு மல்லிகை, ரோஜா,   திருவாச்சி மல்லி, கனகாம்பரம், அரளி, செவ்வரளி, செம்பருத்தி, முல்லை, ஜாதிப்பூ, செண்பகப்பூ, சம்பங்கி,பால்கம் பூ வகைகள் வைத்து பராமரிக்கிறோம்.செடி வகைகளில்  துளசி செடி, கருந்துளசி, பச்சிலை, வெற்றிலை, திப்பிலி, தூதுவளை, கற்றாழை, பிரண்டை, கற்பூரவள்ளி, கறிவேப்பிலை. கத்தரிக்காய், மிளகாய், பாகற்காய், அவரைக்காய், சுரைக்காய், ஸ்பிரிங் பீன்ஸ், மஞ்சள், சேனைக்கிழங்கு,  பூசணிக்காய் உள்ளிட்டவை உள்ளது. வீட்டிற்கு தேவைக்கு போக அக்கம் பக்கம் கொடுத்து உதவுகிறோம்.
இயற்கை உரம் தயாரிப்பு
பஞ்சவர்ணம், இல்லத்தரசி,பெரியகுளம்:  டீத்தூள் கரைசல் செடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தோட்டத்தில் விழுகின்றன இலைகள், காய்கறி கழிவுகள், ஆட்டு எரு, மாட்டு எரு, வாழைப்பழத்தோல், முட்டை ஓடுகள், முருங்கை இலைப்பொடி, சுண்டல், சோயாபீன்ஸ் போன்றவற்றை ஊறவைத்த நீர், புளித்த மோர் பயன்படுத்துகிறோம்.மனமே ரிலாக்ஸ்: தினமும் ஒரு மணி நேரம் மாடித்தோட்டத்தில் உட்கார்ந்து தியானம் செய்கிறோம். இதனால் உடல், மனம் ரிலாக்ஸாவதை உணர முடிகிறது.தினமும் 30 நிமிடம் தோட்டப் பராமரிப்பு செய்கிறோம். ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் செலவழித்து, மரங்கள், செடிகள், பூக்கள் வளர்ச்சி கண்டு மகிழ்கிறோம் என்றார்.-

