/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
/
ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
ADDED : ஜன 07, 2024 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி முந்தல் ரோட்டில் ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
நேற்று போடி கூட்டுறவு பண்டகசாலை மூலம் முந்தல் ரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கிடங்கில் இருந்து போடிக்கு லாரி மூலம் ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
வரும் வழியில் ரோடு அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. போடியை சேர்ந்த டிரைவர் அப்பாஸ் 46, காயம் இன்றி தப்பினார். வேறு லாரியில் ரேஷன் பொருட்கள் மாற்றி கொண்டு செல்லப்பட்டன. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.