/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலரில் சென்றவர் வாய்க்காலில் விழுந்து பலி
/
டூவீலரில் சென்றவர் வாய்க்காலில் விழுந்து பலி
ADDED : டிச 11, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி சீனி முகம்மது நகரில் வசித்தவர் அப்பாஸ் மந்திரி 32. லோடுமேன். இவரது மனைவி ரிஜ்வனா 27.
திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பாஸ் மந்திரி நேற்று முன் தினம் வேலைக்கு செல்வதற்காக அதிவேகமாகவும், கவன குறைவாகவும் டூவீலரை ஓட்டி சென்றுள்ளார். இதில் சத்திரம் பாதையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் டூவீலருடன் கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்த அப்பாஸ் மந்திரியை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்ததில் அப்பாஸ் மந்திரி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்து உள்ளார். ரிஜ்வனா புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

