/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாய் குறுக்கே ஓடியதால் கீழே விழுந்து இளைஞர் பலி
/
நாய் குறுக்கே ஓடியதால் கீழே விழுந்து இளைஞர் பலி
ADDED : டிச 12, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே குரங்கணி மெயின் ரோடு முந்தலில் வசித்தவர் மணிகண்டன் 22. இவர் நேற்று முந்தல் ரோட்டில் டூவீலரில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டுள்ளார். டூவீலர் கட்டுப்பாட்டை இழந்ததால் மணிகண்டன் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அணிந்து இருந்த ஹெல்மெட் உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மணிகண்டனை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலை பரிசோதனை செய்த டாக்டர் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளார். குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

