ADDED : செப் 27, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மாநில அரசு சார்பில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொரு ஞாயிறும் சில ஆதார் மையங்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் உள்ளன. இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல், புதுப்பித்தல், முகவரி, பெயர் மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளபடுகிறது. செப்.,29ல் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.