/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பி.எம்., யாசவி கல்வி உதவித்தொகை மாணவிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஆதார் இணைப்பு பணியால் இழுபறி
/
பி.எம்., யாசவி கல்வி உதவித்தொகை மாணவிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஆதார் இணைப்பு பணியால் இழுபறி
பி.எம்., யாசவி கல்வி உதவித்தொகை மாணவிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஆதார் இணைப்பு பணியால் இழுபறி
பி.எம்., யாசவி கல்வி உதவித்தொகை மாணவிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஆதார் இணைப்பு பணியால் இழுபறி
ADDED : ஜூலை 23, 2025 12:34 AM
மதுரை; தமிழகத்தில் மத்திய அரசின் பி.எம்., யாசவி கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாணவிகள் வங்கி கணக்குடன் ஆதார் விபரம் இணைப்பு நடவடிக்கை இழுபறியாவதால் உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இத்திட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்தொகை சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்தொகையை பெற தற்போது மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் இப்பணி தலைமையாசிரியர்கள் நேரடிப் பார்வையில் நடக்கிறது.
மாணவிகளின் விரல் ரேகை பதிவு, பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம் போன்ற ஆதார் 'அப்டேட்' மேற்கொள்ள வேண்டியவற்றால் இணைப்புப் பணிகள் தாமதமாகின்றன. இதனால் மாணவிகளுக்கு வழங்க வேண்டிய கல்வித் உதவித் தொகை முறையாக கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இவ்வகை கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியாக உள்ளனர். மத்திய அரசின் உதவித் தொகை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.மாணவிகளுக்கு என தனி வங்கி கணக்கு இருந்தால் தான் உதவித் தொகை பெறமுடியும்.
ஆனால் பெரும்பாலும் மாணவிகளின் ஆதார் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. இதனால் வங்கி கணக்குடன் இணைக்க முடிவதில்லை. ஆனால் அப்பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது பெரும் சவாலாக உள்ளது. கல்வி உதவித் தொகை பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.