/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
/
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 26, 2025 04:26 AM

தேனி: ஆடி வெள்ளியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி முழுவதும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும். நேற்று ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேனி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலரும் கூழ் காய்ச்சி பிறருக்கு பிரசாதமாக வழங்கினர்.
தேனி நகர் பகுதியில் சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில், பெரியகுளம் ரோடு மேற்கு சந்தை கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பெரியகுளம் : கவுமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. கம்பம் ரோடு காளியம்மன், பள்ளத்து காளியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி பிரசாதமாக வழங்கப்பட்டது.

