ADDED : டிச 15, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூ : சின்னமனூரில் ஐயப்பன் மணிமண்டபத்தில் வெளி மாநில பக்தர்கள் தங்கி, ஒய்வெடுத்து உணவருந்தி செல்ல ஐயப்பா சேவா சங்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இச் சேவை செய்து வருகிறது. 60 நாட்களுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இங்குள்ள ஐயப்பன் பக்த பஜனை சபை சார்பில் நேற்று காலை முல்லைப்பெரியாற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து லெட்சுமிநாராயணா பெருமாள் கோயிலில் உள்ள நெல்லி மரத்திற்கு உலக நன்மை வேண்டி பூஜைகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஐயப்பன் மணிமண்டப தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.