/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவின் சாக்லேட் ரூ.1க்கு அறிமுகம் செய்ய ஆலோசனை
/
ஆவின் சாக்லேட் ரூ.1க்கு அறிமுகம் செய்ய ஆலோசனை
ADDED : டிச 11, 2025 05:21 AM
தேனி: ஆவின் மூலம் ரூ.1க்கு சாக்லேட், 60, 100, 200 கிராம் அளவுகளில் ரஸ்க் பாக்கெட், ரூ.10க்கு மிக்ஸர் பாக்கெட், ரூ.30க்கு ரோஸ் மில்க் அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவின் மூலம் பால், பாதம் பால், பால் பவுடர், பிஸ்கட், ஐஸ்கிரீம், டெட்ரா பாக்கெட்டுகளில் சாக்லேட், பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி நறுமனம் சுவையில் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் நடத்திய ஆய்வில் பொதுமக்களிடம் ரோஸ்மில்க், ரஸ்க் உள்ளிட்டவைக்கு வரவேற்பு இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, 'ஆவின் சார்பில் ரூ.30க்கு டெட்ரா பாக்கெட்டில் 200 மி.லி., ரோஸ்மில்க், ரூ.1க்கு சாக்லெட், ரூ.10க்கு 20 கிராம் மிக்சர் பாக்கெட்டுகள், ரஸ்க் பாக்கெட்டுகள் 60, 100,250 கிராம் பாக்கெட்டுகள் தலா ரூ.10,18,40க்கு விற்பனை செய்வது பற்றியும், தயாரிப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

