/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆம்னி பஸ் - டூ வீலர் மோதல் தி.மு.க., கவுன்சிலர், மனைவி பலி
/
ஆம்னி பஸ் - டூ வீலர் மோதல் தி.மு.க., கவுன்சிலர், மனைவி பலி
ஆம்னி பஸ் - டூ வீலர் மோதல் தி.மு.க., கவுன்சிலர், மனைவி பலி
ஆம்னி பஸ் - டூ வீலர் மோதல் தி.மு.க., கவுன்சிலர், மனைவி பலி
ADDED : டிச 11, 2025 05:17 AM

உத்தமபாளையம்: டூ - வீலர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், தி.மு.க., கவுன்சிலர், அவரது மனைவி பலியாகினர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 42. இவர், உத்தமபாளையம் பேரூராட்சி 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருந்தார். இவரது மனைவி சுகன்யா, 35. தேனி அன்னஞ்சி அருகே ஊஞ்சாம்பட்டி பள்ளியில் ஆசிரியராக பணி செய்தார்.
நேற்று முன்தினம் மாலை, டூ - வீலரில் கம்பம் சென்ற இருவரும் இரவு, 9:45 மணியளவில் அங்கிருந்து, உத்தமபாளையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காக்கில்சிக்கையன்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது, கம்பத்தில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ், டூ - வீலர் பின் பகுதியில் மோதியது.
இதில், கணவன், மனைவி இருவரும் துாக்கி வீசப்பட்டு பலியாகினர். ஆம்னி பஸ் டிரைவர் சிவக்குமார், 53, என்பவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.